முத்தமிழ் மன்றம்


வளர்ந்து வரும் உலகில், நமது வருங்கால சந்ததியினருக்கு தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துச் செல்லவும், மேலும் பேச்சு, கவிதை எழுதுதல், விவாதம் போன்ற திறன்களை வளர்ப்பதற்காகவும் முத்தமிழ் மன்றம் மூலம் செயல்படுகிறோம். இதில் தாய்மொழியான தமிழ் மீது மிகுந்த ஆர்வத்துடனும் தமிழ் கவிதை, கதை, போன்றவற்றின் மூலம் தமிழின் பெருமையை வெளிப்படுத்த இம்மன்றம் துவங்கப் பட்டுள்ளது.

துவக்க விழா

சங்கர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் முத்தமிழ் மன்றத்தின் தொடக்க விழா 2023 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது

வரவேற்புரை

இயந்திரவியல் துறை மூன்றாமாண்டு மாணவர். கே எஸ் ஆதிநாதன் வரவேற்புரை வழங்கினார்

வரவேற்பு நடனம்

கணிப் பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி ஜெ .சத்யா வரவேற்பு நடனம் ஆடினார்.

தலைமை உரை

சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.சங்கரசுப்பிரமணியம் அவர்கள் முத்தமிழின் சிறப்பு தமிழ் தாயுடனான நமது உறவு, கணினித்தமிழ், திருக்குறளின் சிறப்புகள் பற்றியும் கூறியதோடு மாணவர்களை தமிழ் ஆர்வம் கொள்ள வேண்டும் என ஆர்வத்தை தூண்டி தலைமை உரை ஆற்றினார்.

வாழ்த்துரை

கல்லூரி நிர்வாக அதிகாரி ஆர்.வி.சீனிவாசன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

முத்தமிழ் மன்ற செயலாளர்

முத்தமிழ் மன்ற செயலாளராக இயந்திரவியல் துறை மூன்றாமாண்டு மாணவர். கே எஸ் ஆதிநாதன் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்று கொண்டார்.

சிறப்பு விருந்தினர்

ஒருங்கிணைப்பாளர், கல்லூரி நூலகர். டாக்டர் பா.விஜயலட்சுமி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

சங்கர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். டாக்டர் கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

உற்சாகமான அறிவுரைகள்

இலக்கியம் வாழ்வை வளமாக்கும்.

பேச்சாற்றல் மற்றும் கற்பனை சக்தி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும்.

தயக்கம் இன்றி பேச வேண்டும்.

சிறந்த விஷயங்களை காது கொடுத்து கேட்க வேண்டும் எனவும் பல திருக்குறள்களை மேற்கோள் காட்டி விளக்கினார்.

மாணவர்களை எழுதவும் வாசிக்கவும் தூண்டினார்.

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதை எடுத்துக்காட்டுடன் கூறினார்.

தமிழ் பேச்சுக் கலை, எழுத்துக் கலைப் பற்றிக் கூறி, அவற்றை வளர்க்கும் முறைகள், அதன் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் வாழ்ந்த நாட்டில் வாழும் நாம் மற்றவர்களிடம் கருணையுடன் நல்ல எண்ணத்துடன் நல்ல வார்த்தைகளுடன் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்றார்

நன்றியுரை

கணிப்பொறியியல் துறை முதலாமாண்டு மாணவர் ச.ரிஷிக் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்தோடு விழா இனிதே நிறைவுற்றது.

முத்தமிழ் மன்றத்தின் குறிக்கோள்கள்

கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ் உணர்வை வளர்த்து, தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமையை உணர்த்துதல்

சமூகத்தில் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை உருவாக்குதல்.

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களின் தமிழ் தொடர்பான கருத்துக்களை வெளிக்கொணரும் களமாகவும் விளங்குதல்.

தமிழ் மொழி மீது மாணவர்களின் மொழிப் பற்றுதலை வலுப்படுத்துதல்.

மாணவர்களிடையே சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்துதல்.

பாரம்பரிய கலை மற்றும் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் எண்ணத்தினை வளர்த்தல்.

மாணவர்களுக்கு மேடை பயத்தைப் போக்க ஒரு தளத்தை வழங்குதல்.

தகவல் தொடர்பு திறன் மற்றும் திறமைகளை வளர்ப்பதற்கு முத்தமிழ் மன்றம் உறுதுணையாக விளங்கும்

ஒருங்கிணைப்பாளர்கள்

டாக்டர் பா.விஜயலட்சுமி

கல்லூரி நூலகர்.

வ. கலைச்செல்வி

விரிவுரையாளர்/கணிதம்