Library Literary club

The opening ceremony of Muthamil Forum at Shankar Polytechnic College started off with a Tamil Thai greeting. Third year student of Mechanical Engineering. KS Adinathan gave the welcome speech. CSC first year student J. Sathya performed the welcome dance. The principal of the college, Dr. A. Sankarasubramaniam spoke about our relationship with the mother of Tamil, the merits of computer Tamil, Thirukkural and gave a keynote address to inspire students to be interested in Tamil. College Administrative Officer RV Srinivasan presided. Muthamil was a third year mechanical student as the secretary of the forum.

KS Adinathan was selected and assumed the post. College Librarian. Dr. B. Vijayalakshmi introduced the special guest. Shankar High School Teacher.Dr. Poet G Ganapathy Subramanian was the special guest and inspired the students to read and write as literature enriches life. Speaking skills and imagination will make the students happy. Speaking about the art of Tamil speaking and writing, the methods of growing them, their special features, and the Vallalar who said that whenever he saw a withered crop, we should live a good life with kindness to others, good thoughts and good words. He said. CSC first year student S. Rishik delivered the vote of thanks. The ceremony concluded with the National Anthem.

இலக்கியம் வாழ்க்கை வளபடுத்தும் முத்தமிழ் விழாவில் பேச்சு சங்கர் பல் தொழில்நுட்பக் கல்லூரியில் முத்தமிழ் மன்றத்தின் தொடக்க விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.இயந்திரவியல் மூன்றாமாண்டு மாணவர். கே எஸ் ஆதிநாதன் வரவேற்புரை வழங்கினார்.சிஎஸ்சிமுதலாம் ஆண்டு மாணவி ஜெ .சத்யா வரவேற்பு நடனம் ஆடினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.சங்கரசுப்பிரமணியம் முத்தமிழின் சிறப்பு தமிழ் தாயுடனான நமது உறவு, கணினித்தமிழ், திருக்குறளின் சிறப்புகள் பற்றியும் கூறியதோடு மாணவர்களை தமிழ் ஆர்வம் கொள்ள வேண்டும் என ஆர்வத்தை தூண்டி தலைமை உரை ஆற்றினார். கல்லூரி நிர்வாக அதிகாரி ஆர்.வி.சீனிவாசன் முன்னிலை வகித்தார்.முத்தமிழ் மன்ற செயலாளராக மெக்கானிக்கல் மூன்றாமாண்டு மாணவர். கே எஸ் ஆதிநாதன் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்று கொண்டார். கல்லூரி நூலகர். டாக்டர் பா.விஜயலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். சங்கர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். டாக்டர் கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இலக்கியம் வாழ்க்கை வளமாக்கும், மாணவர்களை எழுதவும் வாசிக்கவும் தூண்டினார். பேச்சாற்றல் கற்பனை சக்தி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும், அகந்தையை விட வேண்டும் என்றும் வாயை கொஞ்சம் திறக்க வேண்டும் எனவும் காதுகளை நன்றாக திறந்து வைக்க வேண்டும் எனவும் பல திருக்குறள்களை கூறி விளக்கினார். கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதை எடுத்துக்காட்டுடன் கூறி தமிழ் பேச்சுக் கலை, எழுத்துக் கலைப் பற்றிக் கூறி, அவற்றை வளர்க்கும் முறைகள், அதன் சிறப்புகள் , வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் வாழ்ந்த நாட்டில் வாழும் நாம் மற்றவர்களிடம் கருணையுடன் நல்ல எண்ணத்துடன் நல்ல வார்த்தைகளுடன் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்றார்.சிஎஸ்சி முதலாமாண்டு மாணவர் ச.ரிஷிக் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்தோடு விழா இனிதே நிறைவுற்றது.