Circular

கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா – பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை & கவிதைப் போட்டிகள் - 03.11.2026

தலைமுறைகளைத் தாண்டியும் தன் வரிகளால் ஊக்கமளிக்கும் கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டை முன்னிட்டு, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி, சங்கர் நகர், பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் போட்டிகளை நடத்துகிறது.

📅 நாள்: செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2026
🎓 தகுதி: 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள்
✅ பதிவுக் கட்டணம்: இல்லை
📜 பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்

கட்டுரைப் போட்டி (3–5 பக்கங்கள்)
• கண்ணதாசனின் தத்துவ முத்துக்கள்
• கவிஞரின் திரைமொழியில் தமிழ் மொழி
• கவிஞரின் வரிகள் சிந்தனைக்கு விருந்து

கவிதைப் போட்டி (16–24 வரிகள்)
• கவிஞரின் கவிதைகளில் பொதிகைத் தமிழ்
• காலத்தை வென்ற கவிஞன்
• கவிஞரின் கவிதை சுதந்திரம் நிரந்தரம்

பரிசுகள் (ஒவ்வொரு போட்டிக்கும்)
🥇 முதல் பரிசு: ₹5,000
🥈 இரண்டாம் பரிசு: ₹3,000
🥉 மூன்றாம் பரிசு: ₹2,000
⭐ ஆறுதல் பரிசு: தலா ₹1,000 (ஒவ்வொரு போட்டிக்கும் 2 பேர்)

முக்கியக் குறிப்புகள்
• கட்டுரை, கவிதை இரண்டும் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்
• மதிய உணவு வழங்கப்படும்
• பரிசளிப்பு விழா – மாலை 3 மணி அளவில்
• நடுவர் தீர்ப்பே இறுதியானது

🗓️ பதிவு செய்ய கடைசி தேதி: 22 அக்டோபர் 2026
📲 பதிவு செய்யவும் (Google Form), மேலும் அறிவிப்புகளுக்கு WhatsApp குழுவில் இணையவும் போஸ்டரில் உள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்யவும்.

ஆசிரியர்களும் பெற்றோர்களும் தமிழ், எழுத்து, கவிதையில் ஆர்வமுள்ள மாணவர்களிடம் இதைப் பகிருங்கள்.

கலை, தமிழ், கனவு… கண்ணதாசன் நமக்கு வழிகாட்டி!

முனைவர் கோ. கணபதி சுப்ரமணியன், தலைமை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
முனைவர் ஆ. சங்கர சுப்ரமணியன், கல்லூரி முதல்வர்
சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி

Download PDF : Click Here